ஏழைகளின் உயர்கல்விக்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வைக்காமல் வாதாடும் வெளிச்சம் செரின்

Posted by Unknown - -


இன்று காலையில் இயல்பாக செய்தித்தாள வாசித்த உங்கள் கண்ணில் இந்த செய்திகள் பட்டிருக்கலாம்.. இவைகள் வெறும் செய்திகள் மட்டுமில்லை.  பலநூறு வருடமாக கல்விக்காக ஏங்கும் எழைகளின், முதல்தலைமுறையினரின் வலிகள்…



நமது வெளிச்சம் அமைப்பு இன்று தமிழகத்தில் அமலில் இருக்கும் முதல் தலை முறை மாணவர்களின் உயர்கல்விக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் ஆணை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருக்கிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் பிரச்சாரப்பயணம், சென்னை வீதிகளில் உண்டியல் ஏந்தியது போன்றவை. வெளிச்சம் அமைப்பின் மாணவர்கள் உண்டியல் ஏந்தியபோது பல்வேறு விதமான அவமானங்களை சுமந்தோம் ஆனால் அந்த அவமானங்களுக்கு வெகுமதியாக முதல் தலைமுறை ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் ஆணை வெளியானது.. Read

இந்தவிசயம் இப்போது பல்லாயிரக்காணக்கான மாணவர்கள் பயன்பெருகிறார்கள். அதில் எத்தனைபேருக்கு இந்தஆணை வெளிச்சம் அமைப்பின் போராட்டத்தால்தான் கிடைத்தது என எத்தனை மாணவர்களுக்கு தெரியும் பரவாயில்லை..

இந்த வருடம் பாலசுப்பிரமணியன் கமிட்டி உயர்த்திய, கல்வி கட்டணத்தை ஏற்காமல் ஏற்கனவே வழங்கப்பட்ட உதவிதொகையை மட்டும் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதனால் பல்லாயிரங்கணக்கான முதல்தலைமுறை மாணவர்கள் மீதி பணம்  கட்டமுடியாமல் தவிக்கும் நிலை  ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக நலனுக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளுகிற அசியல்வாதிகள் யாரும் இதற்காக பேசவோ, இதற்காக அறிக்கை விடவோ இல்லை ஏனெனில் அவர்களுக்கு மாணவர்களின் நலனில் அக்கறையில்லை எனலாம்.

அதேபோன்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் எனும் தமிழக அரசின் ஆணைபடி கல்விக்கட்டணத்தை அந்த் வருடத்தின் கடைசியில் பணமாக திருப்பி தராமல்  முதல்தலைமுறை மாணவர்களுக்கு முதலில் கல்விக்கட்டண சலுகை வழங்குவதுபோல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக்கட்டணத்தை தரவேண்டும் என்று தமிழகத்தில் பல அமைப்புகள் குரல் கொடுத்து வந்தது.

மேற்கண்ட இரண்டு பிரச்சனைக்கும் வெளிச்சம் தீர்வு காண முயற்சி செய்து வந்த நீதி மன்றத்தை நாட திட்டம்மிட்டோம். அதன்படி சென்னை உயர்நீதி மன்றத்தில் இரண்டு பொதுநல வழக்கை தாக்கல் செய்தோம். வழக்கறிஞர் வைத்து வாதிட நினைத்தபோது எங்களிடம் அதற்காக பணம் உதவி ஏதுமில்லை. அந்த நேரத்தில் தான் ஏன் வழக்கை நாமே நடத்தக்கூடாது என நினைத்தோம்.

கடந்த வாரம் தனித்தனியே பதிவு செய்யப்பட்ட வழக்கில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான வழக்கு விசாரணைக்கு வந்தது..

எம்மை நோக்கி கேள்விக்கணைகளை வீசிய தலைமை நீதியரசர் இக்பால் அவர்கள், ஏன் இதை பொதுநல வழக்காக பதிவு செய்ய அவசியம் என்ன என்றார்… கீழ்கண்ட அட்டவணையின் அடிப்படையில் கடந்த வருடம் கல்லூரில் சேர்ந்துள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கைக்காக இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வாதிட்டோம்.  

Number of Seats available on TNEA 2011 counseling

College
OC
BCM
BC
MBC
SCA
SC
ST
Total
Anna University
2347
265
2005
1517
227
1143
77
7581
Govt Aided
1404
160
1201
915
139
686
46
4551
Self-financing
39092
4419
33438
25252
3789
18932
1264
126186
Total
42831
4844
36644
27684
4155
20761
1387
138318

Category Reservation
Under category reservation the following percentage of seats are alloted for each category.
Category
OC
BC
BCM
MBC & DC
SC
SCA
ST
Total-100%
31%
26.50%
3.5%
20%
15%
3%
1%
(OC - Open Competition; Backward Class - 26.50%; Backward Class Muslim - 3.50%; Most Backward Class & Denotified Communities - 20%; Scheduled Caste - 15%; Scheduled Caste (Arunthathiyars) - 3%; Scheduled Tribes - 1%)

 நமது வாததை ஏற்றுக்கொண்ட  நீதியரசர் தமிழக அரசை ஐந்து தினங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.  அதே போல்

முதல்தலைமுறை பட்டதாரி மாணவர்களிடம் கல்வி நிறுவனங்கள் முன்னதாகவே கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ,

கல்லூரிகளில் சேருவதற்கே கஷ்டப்படும் மாணவர்களுக்காகத்தான் இந்த உதவியை அரசு செய்து வருகிறது. ஆனால், பணத்தை மாணவர் சேர்க்கையின்போதே கட்ட வேண்டும் என்று பல கல்லூரிகள் நிர்பந்தம் செய்கின்றன. இதன் மூலம் ஏழை மாணவர்கள் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் சேர்க்கையின்போது கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என வாதிட்டோம்..

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுக்கள் மீது தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலோட்டமாக பார்த்தால் இது இவை வெறும் வழக்காக தெரியும்.. ஆனால் பல்லாயிரம் கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் உயர்கல்வி கிடைக்க செய்யும் நீதிபோராட்டம்…

உங்களை போன்ற உறவுகள் இருக்கிறீகள் எனும் நம்பிக்கையில் தான் ஒற்றை பெண்மணியாக வெளிச்சம் செரின் நீதிமன்றத்தில் வழக்காடுகிறார்.


எம்மோடு பயணிக்கும் உறவுகளே… !
(பெட்டிசன் பிரிப்பரேசன் போன்ற  வழக்கு செலவுக்கு உதவுங்கள்)..
உதவிதொகைகளுக்கான வழக்கம் போல அதற்கான ரசீது தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்)

உதவ நினைத்தால் velicham.students@gmail.com க்கு ஒரு மெயில் போடுங்கள்…

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்

உங்களுக்கு ஏழைகளின் கல்விக்கு ஏதவாவது வகையில் உதவ விருப்பமா? ..................……… கிளிக் செய்யுங்கள்.



English: 

Colleges create hurdles in students getting fee-waiver’

The Tamil Nadu government's schemes to reimburse education costs of first generation college-goers from poor families and SC/ST students is being undermined by educational institutions, two PILs filed in the Madras high court said. 

The first bench comprising Chief Justice M Y Eqbal and Justice T S Sivagnanam, before whom the PILs filed by D Sherin Asha of service organization Velicham came for hearing, issued notices to the state government and several educational institutions. 

In the first petition, Asha said that the government came out with an order on April 16, 2010 providing for reimbursement of education costs of a college student if he hails from a family which has never had a graduate. It implied that his tuition fees would be borne by the government, which would make the payment to the educational institution concerned. 

Asha pointed out that the order whittled down the government's intention by stating that the entire amount would not be reimbursed and said the fee was not being paid during admission. While colleges insist on the full payment of the fee at the time of admission, the government pays the sum only later. This delay results in several beneficiaries failing to avail themselves of the scheme, she said. She wanted the court to direct the authorities to pay the sum at the time of admission itself or direct the institutions to admit students without insisting on full payment initially. 

In the second PIL, Asha named seven students, who had to pay a fee from Rs 30,000 to Rs 3.36 lakh for their engineering and medical courses. Though these students are eligible for reimbursements, they are unable to join the courses because the institutions said that they would be allowed only upon payment of full amount. 

Leave a Reply